2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக வீடு, மனை, வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வழிகள் திறக்கப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கான வருமானம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. டிஜிட்டல் கரன்சி, ஷேர் மார்க்கெட், ரேஸ் லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இருக்கிற பணத்தை வைத்து முதலீடு செய்தாலே லாபம் உண்டு. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள், பிரச்சினைகள் இருக்கும். சுக்ர பகவான், அம்பாள் வழிபாட்டால் நற்பலன்கள் ஏற்படும்.

Updated On 6 Dec 2023 11:47 AM IST
ராணி

ராணி

Next Story