2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நினைப்பது நடக்கும். நம்பியவர்கள் கைவிட மாட்டார்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எண்ணங்கள் ஈடேறும். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத பயணம்.. அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். இளைய சகோதர, சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவுகளால் நன்மை, மகிழ்ச்சி ஏற்படும். சிலவற்றில் துணிந்து செயல்படுவீர்கள். எந்த துறையாக இருந்தாலும் விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ட்ரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், புதிய ஒப்பந்தம் ஆகியவை இருக்கும். வருமானத்தில் பிரச்சினை இல்லை. எது எப்படி இருந்தாலும் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். நெருங்கிய நண்பர்களை விட்டு பிரிய வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வந்து சேரும். நீண்ட தூரம் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் ஏற்றம் கிடைக்கும்.

Updated On 19 Feb 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story