2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைப்பது அனைத்தும் நடக்கும். சில விஷயங்களில் தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் செயல்படுவீர்கள். நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் இல்லை. ஷேர் மார்க்கெட், பாண்டு வாங்க நினைப்பவர்கள், லாட்டரி வாங்க நினைப்பவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. உங்களுக்கு இந்த வாரம் லாபம் எதுவும் இல்லை. உங்களுடைய பணம் எங்கோ ஒரு இடத்தில் லாக் ஆக வாய்ப்புள்ளது. வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை. முன்னேற்றம் மட்டுமே காணுவீர்கள். வங்கி கடன் கிடைக்கும். வழக்குகளில் வெற்றியடைவீர்கள். சொந்த தொழில் பரவாயில்லை. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நிறைய சந்தோஷம், மகிழ்ச்சி உண்டு. முருகன் மற்றும் பைரவர் வழிபாடு ஏற்றத்தை தரும்.
