2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக இருக்கிறது. தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். உங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அம்மா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் வேண்டாம். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். காரணம் கிரக நிலைகள் சரியாக இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானம் இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் தொழிலில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். ஆண் வேலையாட்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அமைய வாய்ப்புள்ளது. காதலில் நிறைய பிரச்சினை, போராட்டங்களை சந்திக்க வேண்டிய காலம். எது எப்படி இருந்தாலும் உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். நண்பர்களை பிரிந்து இருப்பீர்கள். துர்க்கை மற்றும் பைரவரை வழிபட்டால், கெடுபலன்கள் குறையும்.

Updated On 8 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story