2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலைவாய்ப்புகள் நன்றாக உள்ளன. வேலையில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். வழக்குகள் இருந்தால் அவற்றில் ஜெயிப்பீர்கள். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக வீடு, இடம், வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வாங்க நினைத்தவர்கள் கடன் வாங்கியாவது வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகளும் சுமாராக இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். இந்த வாரத்தில் இன்னும் கொஞ்சம் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மற்றும் பைரவரை வழிபாடு செய்தால் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.
