2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாருடைய பணமாவது கையில் இருக்கும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து போவார். மணவாழ்க்கையை பொறுத்தவரையில் கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், எதிர்பாராத வைத்தியச் செலவுகள் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. இவ்வளவு காலம் வேலையில் திருப்தி இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் எனர்ஜிட்டிக்காக அமையும். வேலையில் உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் படிப்புக்கு தகுந்த வேலை, அதற்கு தகுந்த ஊதியம் போன்றவை அமையும். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. உங்கள் மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வியை தொடருவதில் தடை இருப்பதால் கொஞ்சம் காத்திருங்கள். அப்பாவால் எதிர்பாராத உதவி கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இல்லை. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.
