2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில் சிக்கல் இருப்பதால் உங்கள் வேலையை யாரை நம்பியும் கொடுக்காதீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில் பரவாயில்லை. கையில் யாருடைய பணமாவது புழக்கத்தில் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு பரவாயில்லை. முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குறிப்பாக இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. இடம், வண்டி, வாகனம் ஆகியவை வாங்க வேண்டும் என்றால் பழைய பொருட்களை கொடுத்து புதியது வாங்குங்கள், நல்லது நடக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆனால், வருமானங்கள் சுமார். அரசியல் வாழ்க்கையில் கவனமாக இருங்கள். சொந்த தொழில் சுமார். மணவாழ்க்கையை பொறுத்தவரை சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். தேவையில்லாமல் யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் முழுவதும் அம்பாள் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.
