2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. வேலையில் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். ஒரு பக்கம் நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 5-ம் இடத்தில் 4 கிரகங்கள் இருப்பதால், எதிர்பாராத மகிழ்ச்சியும், சந்தோஷமும் உங்களைத் தேடி வரும். புதிதாக காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு அது திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய அளவில் நோய்வாய்ப்பட்டிருந்தால் கூட, நோயின் தீவிரம் குறையும். உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் சுமாராக இருக்கும். பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. எனவே, அடக்கி வாசியுங்கள். கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமானையும், பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரையும் வழிபட்டு வாருங்கள்.
