2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடத்தில் கேதுவுடன் இருப்பதால், இந்த வாரம் அந்தஸ்து மற்றும் புகழ் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்; லாபம் வருவதுபோல் தோன்றும், ஆனால் கைக்கு வருவதில் தடைகள் இருக்கும். புதிய காதல் வாய்ப்புகள் உண்டு. காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடியலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டு. பேச்சின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உண்டு. நீண்ட நாட்களாக கிடைக்காத மூதாதையர் சொத்துக்கள் இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும், வேலை இருக்கும், சும்மா இருக்க மாட்டீர்கள். நாட்பட்ட நோய்களிலிருந்து குணமடைய வாய்ப்பு உண்டு. கடன்கள் குறைய வாய்ப்புள்ளது. தாய் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தை, வர்த்தகம், ஆன்லைன் முதலீடுகள் போன்ற ஊக வணிகங்களில் எச்சரிக்கையாக இருங்கள், பணம் முடங்க வாய்ப்புள்ளது. விட்டதைப் பிடிக்க நினைக்க வேண்டாம். நட்பு வட்டத்தைப் பராமரிக்கவும். மறுமண முயற்சிகள் செய்யலாம். கலைத்துறையில் புகழ் இருந்தாலும், தடைகள் இருக்கும். விளையாட்டு மற்றும் அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபடவும்.

Updated On 1 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story