2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். பொருளாதார ரீதியாக எதிர்பாராத பண வரவு மற்றும் பொருள் வரவு உண்டு. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய காதல் மலர வாய்ப்பு உண்டு. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றி பெறும். முறிந்த காதல் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அந்தஸ்து, புகழ் சுமாராகவே இருக்கும், எனவே அடக்கி வாசியுங்கள். வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை இந்த வாரம் பரவாயில்லை. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் உயர் அதிகாரிகள் வேலையில் உங்களுக்கு உதவுவார்கள். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு அல்லது நிலுவையில் உள்ள பணம் தவணை முறையில் வந்து சேரும். உங்கள் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை வெற்றிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கும், நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விற்பனை மற்றும் லாபம் உண்டு. பாஸ்போர்ட், விசா அப்ளை செய்தவர்களுக்கு வந்து சேரும். சிவ வழிபாடு மற்றும் பிரம்மாவின் தரிசனம் முக்கியம்.
