2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியும் வாய்ப்புகள் உண்டு. பொழுதுபோக்கு, எதிர்பாராத பயணங்கள் ஆகியவை உண்டு. வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஊக்கத்தொகை என கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடன் எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கடன் வாங்கும் காரணங்கள் கைகூடும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மணவாழ்க்கை சுமாராக இருக்கும். பிரிவுகள், பிரச்சனைகள் வரலாம். சொந்த தொழில் லாபம் தரும் வாரமாக இல்லை. முதலீடுகளைத் தவிர்க்கவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியில் தடைகள் வரலாம், கவனம் தேவை. குழந்தைகள் இருந்தால் அவர்களால் பிரச்சனைகள், பிரிவுகள் வரலாம். வேலை தவிர மற்ற விஷயங்களில் பொறுமையாகவும், அடக்கி வாசிப்பதும் நல்லது. யூக வணிகங்களில் குறைந்த முதலீடு செய்தால் நல்ல லாபம் உண்டு. இந்த வாரம் முழுவதும் மகாவிஷ்ணுவையும், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது.
