2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வம் இந்த வாரம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அல்லது தொழில்முனைவோராக ஆக இது ஒரு நல்ல நேரம். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால், இந்த ஆடி மாதத்திலும் பெரிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்கலாம், எதிர்காலத்தில் பெரிய லாபத்தைத் தரும். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. புதிய காதல் அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றி பெறும். பிரிந்து போன காதலர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மனவருத்தங்களும், போராட்டங்களும் வரலாம். குழந்தைகளை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உற்பத்தித் துறையினருக்கு விற்பனை நன்றாக இருந்தாலும் லாபம் குறைவு. விவசாயத்தில் லாபம் குறைவாக இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று பணிபுரிய முயற்சி செய்யலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். தொழிலில் வருமானங்கள் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை திருப்தியற்றதாக இருக்கும். பிரிவு, பிரச்சனை, போராட்டம் ஏற்படலாம். துர்க்கையையும், பைரவரையும் வழிபடுங்கள்.
