2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத தெய்வ அனுகூலம் உண்டாகும். உங்கள் விருப்பங்களும், எண்ணங்களும், ஆசைகளும் ஏதோ ஒரு விதத்தில் நிறைவேறும். 2-ம் இடத்தில் குருவும், சனியும் பார்ப்பதால், வருமானமும், சம்பாத்தியமும் இருக்கும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் ஓரளவு வெற்றி பெறும். தேவையற்ற குழப்பங்களையும், சிந்தனைகளையும் தவிர்க்கவும். சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் இருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், தாயாரின் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் தேவை. உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை நன்றாக இருந்தாலும், லாபம் குறைவாக இருக்கும். பெரிய அளவில் உற்பத்தி செய்பவர்கள் இந்த வாரம் நிதானமாகச் செயல்பட வேண்டும். புதிய காதல் உறவுகள் மலர வாய்ப்பு உண்டு. ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடிய வாய்ப்பு உண்டு. பிரிந்த காதல் ஜோடிகள் மீண்டும் சேரலாம். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியம் அல்லது அவர்களால் மன வருத்தங்கள் ஏற்படலாம். வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். இடமாற்றம், பதவி மாற்றம், உள்மாற்றம் அல்லது வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் அதிகம். வியாபாரம் சுமார். மகாலட்சுமியையும், சிவன் கோயிலில் உள்ள பிரம்மாவையும் வழிபடுவது நல்லது.

Updated On 29 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story