2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வருமானம் இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். எட்டாம் இடத்தில் சுக்கிரன், குரு இருப்பதால் கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், திருமண வாழ்க்கையில் இனிமை குறையலாம். நான்காம் இடத்தில் ராகு குருவுடன் இருப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். ஐந்தாம் இடத்தில் சனி இருப்பதால் காதல் உறவுகளுக்கு வாய்ப்பு உண்டு, காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் முடியலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சுமாரான பலன், பெரிய லாபம் இருக்காது. அரசியலில் உள்ளவர்களுக்கு புகழும் விளம்பரமும் கிடைக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. வேலை மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றவோ, கம்பெனி மாறவோ நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழில் தகராறுகள் அல்லது நிச்சயமற்ற தன்மை இருக்கலாம். கூட்டாளி மற்றும் வாழ்க்கை துணை இரு பக்கமும் திருப்தியின்மை ஏற்படலாம். நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் உற்பத்தி சார்ந்த துறையில் லாபம் குறைவாக இருக்கும். அந்தஸ்து, கௌரவம், புகழ் கூடுவதாகத் தோன்றினாலும், அதில் பல பிரச்சனைகள் வரலாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். புதிய தொழில் தொடங்க இது உகந்த வாரம் அல்ல. மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது.

Updated On 5 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story