2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும். இதுவரை வராத பணம் இந்த வாரம் கைக்கு வரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சுமாரான பலன்களைத் தரும். எனவே, வாழ்க்கையில் பொதுவாகவே செய்யும் வேலைகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. நிரந்தர சொத்துக்கள், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க நினைத்தவர்கள் சற்று காத்திருப்பது நல்லது. வாங்கினால் அதில் பிரச்சனைகள் வரலாம். கல்வி, குறிப்பாக அண்டர் எஜுகேஷனில் போராட்டங்கள் இருக்கும். தாயாரின் உடல் நலத்திலும் கவனம் தேவை. வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். மாத சம்பளம் வாங்குபவர்களுக்கும், உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டு. பதவி உயர்வு எதிர்பார்க்கிறவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. மூத்த சகோதர, சகோதரிகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். தந்தையின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குழந்தைகளிடமிருந்து பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ராசிக்கு நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சியற்ற தன்மை ஏற்படலாம். புதிய காதல் மலரவும், பழைய காதல் திருமணத்தில் முடியவும் வாய்ப்புகள் உண்டு. பிரம்மாவையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.

Updated On 19 Aug 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story