2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ், நிலுவைத் தொகை போன்றவற்றை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அவை கிடைக்கும். உங்கள் வேலைக்கான கிரக நிலைகள் சிறப்பாக உள்ளன. கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். குறிப்பாக, எந்த காரணத்திற்காக கடன் வாங்குவீர்களோ, அது நிறைவேறும். வழக்குகள் இருந்தால் வெற்றி பெறுவீர்கள் அல்லது அதிலிருந்து விடுபடுவீர்கள். எதிரிகளை வெல்வதற்கான வாரம் இது. நல்ல வேலையாட்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, திறமையானவர்கள் கிடைப்பார்கள். புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே காதலில் இருப்பவர்களுக்கு, காதல் வெற்றி பெறும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுகள் உண்டு. உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்குத் தகுந்த விற்பனை இருக்கும். ஆனால் பெரிய லாபம் இருக்காது. தாயின் உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். நீண்டதூரப் பயணங்களுக்கான திட்டங்கள் உருவாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கலைத் துறையில் இருப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. பங்குச்சந்தை, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற யூக வணிகங்களில் பெரிய முதலீடுகள் வேண்டாம். இந்த வாரம் பைரவர் மற்றும் பிரம்மாவை அவசியம் வழிபடுங்கள்.
