2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முன்னோர்களின் சொத்துக்கள் வந்து சேரும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு, பண வரவு இருக்கிறது. பி.எப், அரியர்ஸ், கிராஜுவிட்டி போன்ற வராத பணங்கள் வந்து சேரும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். நெருங்கிய நட்புகளை பிரிவீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வரவுக்கு தகுந்த செலவுகள் இருக்கிறது. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். சொந்த தொழில் பரவாயில்லை. வேலை நன்றாக இருக்கிறது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், லாபம், வருமானம், சம்பாத்தியம் நன்றாக இருக்கிறது. போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசாங்க விஷயத்தில் கவனமாக இருங்கள். மேலே படிக்க நினைத்தால் தாராளமாக படியுங்கள். பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

Updated On 15 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story