2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. தொழில் முனைவோராக வருவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. வேலை பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள் ஏதோ ஒரு வகையில் உதவி புரிவார்கள். உயர் அதிகாரிகள் உங்களை டார்ச்சர் செய்வார்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவியிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் உண்டு. இந்த வாரம் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். தேவையில்லாத முயற்சிகள், சிந்தனைகள், பயணங்கள் வேண்டாம். நீங்கள் நினைப்பது நடக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உறவுகளால் தேவையற்ற மன குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் இருந்து கொண்டே இருக்கும். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவத்தலத்தில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபடுவது சிறந்தது.

Updated On 22 April 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story