✕
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
கவனம் அவசியம்ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரையில், இதுவரை நிம்மதியில்லாமல் சென்று கொண்டிருந்த உங்கள் வாழ்க்கையில், அடுத்த ஒன்றரை வருடத்திற்கு எல்லாவிதமான நற்பலன்களும் கிடைக்கப்போகிறது. இருப்பினும் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் கேது அமர்ந்து சிறு சிறு உடல் உபாதைகளை தரப்போகிறார். அவற்றில் இருந்து விடுபட இறைவழிபாடு சிறந்தது. இந்த வார ராசிபலன்களை பொறுத்தவரையில், உங்கள் ராசியில் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வாகன விஷயங்களிலும் சரி , வீடு வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. இதன்பிறகு எல்லாவிதமான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

ராணி
Next Story