2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம், அரசு சார்ந்த விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும். கௌரவம், அந்தஸ்து கூடும். சமுதாயத்தில் உங்களுக்கான பெயர், புகழ் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நடைபெறும். நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிறைய படிப்பீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். குறிப்பாக உங்கள் ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். வேலையில் எதிர்பார்க்கக் கூடிய அதே நேரம் எதிர்பாராத முன்னேற்றம் நிறைய உள்ளது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகரை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.
