2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். நினைப்பவை அனைத்தும் நடக்கும். எதிர்பாராத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமலேயே இந்த வாரத்தில் சம்பாதிப்பீர்கள். பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இல்லை. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை பிரிந்து இருப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் ஆலோசனை செய்யாதீர்கள். வேலை நன்றாக உள்ளது. ஆனால், நீங்கள்தான் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அதனை மாற்றிக்கொள்ளுங்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் உங்களது பார்ட்னர் திருப்தி இல்லாமல் இருப்பார். காதல் விஷயங்களில் பிரச்சினைகள் இருக்கிறது. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோசம் இருக்கிறது. அந்நியமொழி பேசும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெருமாள் மற்றும் சிவன் வழிபாடு செய்வது நல்லது.
