2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை நிறைய கிடைக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவினங்களும் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. உங்கள் கெரியர் நன்றாக இருக்கிறது. ஆனால், தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். போட்டித் தேர்வு, இன்டர்வியூ போன்றவற்றில் பங்கு பெற்றிருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால், கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். எதிர்பாராத பயணம் மகிழ்ச்சியை தரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்க்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. உங்களின் அரசியல் வாழ்க்கை சுமார். கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். எதிர்பாராத நட்பு கிடைக்கும். ஏற்கனவே உள்ள நட்பால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியை தரிசனம் செய்யுங்கள். குறிப்பாக சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
