2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. தொழில் தொடங்கி தொழில் முனைவோராக வர நினைப்பவர்கள், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். உங்களது லாப ஸ்தானத்தில் ராகு மற்றும் சூரியன் இருப்பதால் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். ரேஸ், லாட்டரி, ஆன்லைன் தொழில், டிஜிட்டல் கரன்சி, டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்யும்போது கவனமாக செய்யுங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கும். உங்கள் காதலில் பிரச்சினைகள், போராட்டங்கள் மட்டுமில்லாது காதல் முறிந்துபோகவும் வாய்ப்புள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் உங்களது பார்ட்னர் திருப்தி இல்லாமல் இருப்பார். அதே நிலைதான் திருமண வாழ்க்கையிலும் இருக்கும். சிவன் மற்றும் துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
