2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் வேலையில் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். வேலையில் நிறைய தடைகள் இருக்கின்றன. கிடைத்த வேலையை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோசமாகவும் செய்யுங்கள். அவசரப்பட்டு வேலையை விடுவது, வேறு வேலைக்கு முயற்சி செய்வது இவற்றையெல்லாம் ஒதுக்கி வையுங்கள். கிரகங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக சுற்றுவதில்லை. அதேபோன்றுதான் நமக்கும். அதனால் காத்திருப்பது நல்லது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்டெர்டெயின்மென்ட் இருக்கும். எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கும். குறிப்பாக தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகான வாய்ப்பு, குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், அவர்களால் நன்மை அத்தனையும் இருக்கிறது. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்கள் சுமார். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. எதிரிகளை ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. துணிந்து சில முடிவுகளை எடுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் உங்கள் புகழ், அந்தஸ்து கூடும். இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.

Updated On 25 Nov 2024 3:56 PM GMT
ராணி

ராணி

Next Story