2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த தனவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. பேச்சு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை பரவாயில்லை. வேலை இல்லாமல் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். சம்பள உயர்வு, பணி உயர்வு கிடைக்கும். நீங்கள் கலந்துகொண்ட நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் நன்மையையும், வெற்றியையும் அடைவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், குறிப்பாக தாயின் உடல் நலத்திலும் கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். ஆனால், லாபம் குறைவாக இருக்கலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கூடும். தொழில் ரீதியாக ஏற்றம் காண்பீர்கள். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். உங்கள் மண வாழ்க்கையில், கணவன்- மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகலாம். இந்த வாரம் துர்க்கை மற்றும் காளி தேவியை வழிபடுவது நல்லது.
