2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் கையில் பணம் புழங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீங்கள் நம்பியவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத பயணம் ஒன்று மகிழ்ச்சியைத் தரும். ஆண் நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்கவும், பகுதிநேர அல்லது ஆன்லைன் கல்வி கற்கவும் இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் அமையும். கல்வியில் முழு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். அதே சமயம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை; லாபம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ், அந்தஸ்து கூடும், ஆனால் வருமானம் சுமார் ரகமாக இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்கள் எதிரிகளை வெல்வார்கள். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, வருமானத்திற்கான வாய்ப்புகள் தொடரும்; பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சாதாரண முதலீடு போதும். சிறு தொழில், சுய தொழில், ஆன்லைன் பிசினஸ் என எந்தத் தொழில் செய்தாலும் இந்த வாரம் சிறப்பானதாக அமையும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் கைகூடி திருமணத்தில் முடியலாம், அல்லது பிரேக்அப் ஆனவர்கள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. நட்பு வட்டம் உங்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும். இந்த வாரம் விநாயகர் மற்றும் சிவபெருமானைத் தரிசிப்பது மிகவும் முக்கியம்.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story