2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். நிரந்தர சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனையும், வருமானமும் கிடைக்கும். விவசாயத்தில் ஓரளவுக்கு மகசூல் இருக்கும். புதிய காதல் மலரும். ஆனால், அதில் போராட்டங்களும் இருக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபத்தை தரும், உங்களுக்குப் பிரயோஜனம் இல்லாமல் இருக்கலாம். யூக வணிகங்களில் (பங்குச்சந்தை, லாட்டரி) ஓரளவுக்கு லாபம் உண்டு. குறைந்த முதலீட்டில் ஈடுபடலாம். எதிர்பாராத மகிழ்ச்சியும், அதிக உடல் உழைப்பு இல்லாமல் வருமானம் ஈட்டுவதற்கான சூழ்நிலைகளும் உருவாகும். வியாபாரத்தில் தொழில் தகராறுகள், நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் தொழில் நடக்கும். திருப்தியற்ற மனநிலை ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம், பிரச்சனைகள் வரலாம். தாயார் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமானையும், காளியையும் வழிபடுவது நல்லது.
