2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருப்பதால், இந்த வாரம் முதலீடு செய்ய சந்தர்ப்பம் இருந்தால் செய்யுங்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும், செயலாக்கம் பெறும். நீங்கள் நம்பியவர்கள் இந்த வாரம் உண்மையாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்பார்கள். ஒரு எதிர்பாராத பயணம் வெற்றியளிக்கும். நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக கடன் அல்லது லோன் மூலம் வாங்கலாம். தொழில் மற்றும் வேலையில் கடின உழைப்பு தேவை. அப்பொழுதுதான் பெரிய வெற்றி கிடைக்கும். இல்லையெனில் வழக்கமான நிலைதான் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தகராறுகள் அல்லது நிச்சயமற்ற நிலை ஏற்படலாம். பெரிய முதலீடுகளை இந்த வாரம் யோசித்து செய்யுங்கள். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். திருப்தியற்ற நிலை ஏற்படலாம். காதல் உறவுகளில் நிறைய போராட்டங்கள் இருக்கும். இந்த வாரம் உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். நல்ல நட்பு வட்டம் உருவாகும். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் கோவிலில் உள்ள அம்பாளை வழிபடுவது நல்லது.
