2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியிலேயே இருப்பதால், இந்த வாரம் உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். நிதி நிலைமை பரவாயில்லை; குறிப்பாக பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் இந்த வாரம் வெற்றியைத் தரும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாய் இருப்பார்கள், உறவுகள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம், அவை நன்மையைத் தரும். சொந்தமாக இடம் அல்லது வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. தாய் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன; கடின உழைப்பிற்கு அங்கீகாரம், பதவி உயர்வு, ஊக்கத்தொகை அல்லது போனஸ் கிடைக்கும். கடன் விண்ணப்பங்கள் இந்த வாரம் நிறைவேறும், தேவையான கடன்கள் கிடைத்து, அதன் நோக்கங்களும் நிறைவேறும். வியாபாரத்தில் தொழில் தகராறுகள், நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், தொழில் இருக்கும். திருமண வாழ்க்கை சற்று திருப்தியற்றதாக இருக்கலாம். முருகப்பெருமானையும், துர்க்கையையும் வழிபடவும்.
