2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஆனால் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முயற்சிகள் மிதமாகவே பலன் தரும். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் எதிர்பாராத நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல விற்பனையும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவுக்கு வாய்ப்புள்ளது அல்லது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் சூழ்நிலை உருவாகும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள் அல்லது தள்ளிப்போன நல்ல நிகழ்வுகள் நடக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள், கடின உழைப்பு மட்டுமே அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். வியாபாரத்தில் சண்டை சச்சரவுகள், நிச்சயமற்ற தன்மை இருக்கும். கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். ராகு பத்தாம் இடத்தில் இருப்பதால் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிய தொழில்கள் தொடங்க முயற்சி செய்யலாம். இந்த வாரம் மகாலட்சுமியையும், சிவன் கோயிலில் உள்ள அம்பாளையும் வழிபடுவது நல்லது.

Updated On 17 Jun 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story