2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே செவ்வாயின் நட்சத்திரத்தில் இருப்பதால், முதலில் மனதில் இருக்கும் திருப்தியற்ற நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த ஆடி மாதத்திலும் வீடு, மனை, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை பரவாயில்லை, பணப்புழக்கம் சீராக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. உறவுகளால் மகிழ்ச்சியும், நன்மையும் உண்டு. புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், உங்களை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த வாரம் சாதகமானது. எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கும், ஆன்லைன் வணிகம் செய்பவர்களுக்கும் வருமானம் நன்றாக இருக்கும். வேலையில் திருப்தியின்மை இருந்தாலும், வேலை வாய்ப்புகளுக்கு குறைவில்லை. தொழிலில் லாபம் உண்டு, ஆனால் சாதாரண முதலீடுகளை மட்டும் செய்யுங்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய காதல் அமைய வாய்ப்பு உண்டு. உயர்கல்விக்கு பொறுமை தேவை. கலைத்துறையினருக்கு புகழ் மற்றும் வருமானம் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. முருகப் பெருமானையும், துர்க்கையையும் வழிபடவும்.
