2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கையில் பணம் புரளும். குறிப்பாக மற்றவர்களுடைய பணம் உங்கள் கையில் சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு அதன் மூலமாக வருமானம் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்டகாலமாக எதிர்பார்த்த செய்திகள், தகவல்கள் சாதகமாக வரும். உறவுகளால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டாகும். பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணங்கள் இந்த வாரம் ஏற்படலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பந்தயம், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தாலும் ஓரளவு பணம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அனைத்து வகையான யூக வணிகங்களும் இந்த வாரம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். புதிய காதல் உறவுகள் மலர வாய்ப்பு உண்டு. ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த வாரம் யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். திரும்பப் பெறுவது கடினம். ஒரு நல்ல நட்பு வட்டம் அமையும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். காளியையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.

Updated On 29 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story