2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
2-ம் இடத்தில் சுக்கிரன் குருவுடன் இருப்பதால், பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உழைத்து சம்பாதித்த பணம் கையில் சேரும். எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி நிச்சயம். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக அமையும். வாழ்க்கையில் நீங்கள் ஆக ஆசைப்பட்டதை அடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நீண்ட நாட்களாகப் பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரலாம். உறவினர்களால் மகிழ்ச்சியும், நன்மையும் உண்டாகும். உங்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் பல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவும், பின்பற்றவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் பெரிய அளவில் செயல் வடிவம் பெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெறுவதற்கு இறைவனின் துணை கிடைக்கும். காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். சாதி, மதம், இனம், மொழி கடந்த உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஊக வணிகங்கள் நல்ல லாபம் தரும். தொழில் நன்றாக இருக்கும். ஒரு பக்கம் நஷ்டம் அல்லது பணத் தடை ஏற்பட்டாலும், மறுபக்கம் லாபம் வரும் வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய தொழில் அல்லது தொழிற்சாலை தொடங்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. விநாயகரையும், நரசிம்மரையும் வழிபடுவது சிறந்தது.
