2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும். கையில் பணம் புரளும். மற்றவர்களின் பணத்தை கையாளும் சூழல் உருவாகலாம். உங்கள் விருப்பங்கள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகள் நிறைவேறும். எதிர்பாராத புதிய நட்புகள் உருவாகலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் நண்பர்களால் உங்களுக்கு நிறைய முன்னேற்றங்கள் இருக்கும். இந்த வாரம் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். அதுவும் உங்களுக்கு நன்மையாக அமையும். கலைத்துறையில் இருப்பவர்கள் அதிக புகழ் பெறுவார்கள். வருமானமும் பெருகும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, வேலை இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு அது கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. காதல் விஷயங்களில் தடைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் முருகனையும் நரசிம்மரையும் வழிபடுங்கள்.
