2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கையில் பணம் புரளும், மேலும் நிலுவையில் உள்ள பணம் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் புதிய காதல் உறவுகள் ஏற்படும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு அவர்களது உறவு வெற்றிகரமாக அமையும். பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புது வரவுகள் உண்டு. பொதுவான வருமானம் குடும்பத்தில் சேரும். நீண்ட நாட்களாக நகைகள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். உங்கள் அந்தஸ்தும் புகழும் உயரும். ஆனால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். கொஞ்சம் கவனமாகவே இருங்கள். குறிப்பாக பார்ட்னர்ஷிப்பில் வியாபாரம் செய்தால், நீங்கள் நஷ்டமடைய வாய்ப்புள்ளது. இந்த வாரம் துர்கை மற்றும் பைரவரை வழிபடுவது சிறந்தது.

Updated On 2 Sept 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story