2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கையில் பணம் புரளும். குறிப்பாகப் பேச்சுத் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இரண்டாம் இடத்தில் குரு தன் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், நீண்ட நாட்களாக நகை மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு, அந்த ஆசைகள் நிறைவேறும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்களை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் உங்களிடம் திரும்புவார்கள். உறவுகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும், வருமானமும் உண்டு. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். லாட்டரி, ரேஸ், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சாதாரண முதலீடுகளும் நல்ல வருமானத்தைத் தரும். குடும்பத்தில் புதிய வரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்னோர்களின் சொத்துக்களால் பண வரவு மற்றும் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ், நிலுவைத் தொகை போன்ற நிதிப் பலன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, அவை நிச்சயம் கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் நரசிம்மர் வழிபாடு மிகவும் அவசியம்.
