2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் கையில் பணப்புழக்கமும் பண வரவும் நன்றாகவே இருக்கும். யாரிடமாவது பணம் வர வேண்டியிருந்தால், அது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பெரிய அளவில் உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் அமையும் அதற்கான சூழ்நிலையும் கைகூடும். அதேசமயம் தற்போது படித்து கொண்டிருப்பவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் முயற்சிகள் இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். இதனால் வழக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நல்லது. எதிர்பாராத பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. காதல் உறவில் இருப்பவர்களுக்கு காதல் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சிகள் ஓரளவே சாதகமாக இருப்பதால், வேலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் கடமையை மட்டும் செய்வதில் கவனம் செலுத்துங்கள். சொந்தத் தொழில் சுமாராக இருக்கும். உங்கள் உழைப்பு அடுத்தவர்களுக்கு லாபத்தைத் தரலாம். உங்கள் பணம் முடங்க வாய்ப்புள்ளது. புதிய நட்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மூத்த சகோதர சகோதரிகளால் மற்றும் நட்பு வட்டாரங்களால் நன்மை உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களை கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். இந்த வாரம் நீங்கள் முருகப்பெருமானையும், சிவாலயங்களில் சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

Updated On 16 Sept 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story