2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களுக்கு நீண்ட நாள் கனவான நிலம், வீடு, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் மற்றும் விற்பனை அதிகரிக்கும். தாயாரின் அன்பு மற்றும் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். நண்பர்களால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நன்மையும் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் ஆகியவை உயரும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடைபெறும். புதிய தொழில் அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்பாக அமையும். தொழில் ரீதியாக, முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் லாபம் குறைவாக இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் மிதமான முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுக்கான வாய்ப்பு உண்டு. பணம், நகை, ஆடைகள் வாங்கும் யோகம் உள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல், யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் நீங்கள் முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
