2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம், நீங்கள் கடன் வாங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது வாகனங்கள் வாங்க நினைத்தால், அதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு, உங்கள் உற்பத்திக்கு நல்ல விலை கிடைக்கும். பெரிய அளவில் உற்பத்தி செய்பவர்களுக்கு விற்பனையும், லாபமும் அதிகரிக்கும். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் இந்த வாரம் நல்ல வருமானம் உண்டு. பங்குச்சந்தை, லாட்டரி, பரஸ்பர நிதி போன்ற யூக வணிகங்களில் சாதாரண முதலீடுகள் செய்யலாம். பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, உங்களுக்கு வேலை இருக்கும். ஆனால், அந்த வேலையில் திருப்தி இருக்காது. வேலையில் மகிழ்ச்சியைத் தேட முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எந்த சுயதொழில் செய்தாலும் அதில் லாபம் உண்டு. ஆனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள், நீங்கள் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது. ஆகையால், கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருங்கள். உங்கள் அந்தஸ்து, புகழ் கூடும். அரசாங்கத்தால் காரியங்கள் நடக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த வாரம் நீங்கள் துர்கை மற்றும் காளி அம்மனை வழிபடுவது நல்லது.
