✕
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை சிறப்பாக இருக்கும். தகவல் தொடர்பு சாதனத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. இருப்பினும் கவனம் தேவை. பொருளாதாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகள் மற்றும் உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கும் ஏற்றம் உண்டு. டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்யவேண்டாம். ஒரு புறம் புதுக் காதல்கள் மலர்ந்தாலும், மறுபுறம் ப்ரேக் -அப்களும் நடக்கும். மூத்த சகோதர சகோதரிகள் விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் அவர்களால் பிரச்சினைகள், போராட்டங்கள் வரும். பணம், பொருள் காணாமல் போகும். குழந்தைகளுக்காக செலவிடுவீர்கள்.

ராணி
Next Story