✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களையும் அறியாத மகிழ்ச்சி, பொழுதுபோக்கு இருக்கும். எதிர்பாராத சுற்றுலா அல்லது பிரயாணம் அமையலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், ரேஸ் லாட்டரி, ஆன்லைன் பிஸினஸ் அல்லது ட்ரேடிங்கில் முதலீடு செய்ய நினைத்தால் யோசித்து பண்ணுங்கள். செய்யும் வேலையைவிட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்படும் சூழல்தான் இருக்கும். எனவே வேலையில் கவனம் தேவை. நாள்பட்ட நோய் குணமாகும். கடன் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த பிஸினஸ் மற்றும் பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. பிற மொழி நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

ராணி
Next Story