✕
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்கும். வேலையில் சிரத்தை எடுத்து செய்யவும். அவசரம் மற்றும் அவசியம் இருந்தாலொழிய கடன் வாங்க வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். நண்பர்களால் சந்தோஷம் உண்டு. குறிப்பாக, அந்நிய பாஷை பேசும் நண்பர்களால் சகாயம் உண்டு. மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. குழந்தைகளைவிட்டு பிரிந்திருக்க வேண்டிய காலம் இது. குழந்தைகளுக்காக செலவிடுவீர்கள். மகாலட்சுமி மற்றும் சிவாலயத்தில் அம்பாள் தரிசனம் செய்ய பிரச்சினைகள் குறையும்.

ராணி
Next Story