2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டாகும். நீண்ட தூர பயணத்திற்கான முன்னேற்பாடுகளை இப்போதிலிருந்தே செய்வீர்கள். நீங்கள் நினைக்கும் காரியங்கள் இறையருளால் நடக்கும். தேவையில்லாத குழப்பம், சிந்தனைகள் உங்களுக்கு இருந்தால் தவிர்த்துவிடுங்கள். கல்வி மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கலை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ட்ரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். அதனால் அளவோடு முதலீடு செய்வது நல்லது. எதிர்பாராத சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செலவு செய்ய வேண்டிய சூழல்கள் ஏற்படும். எதிர்பாராத நட்பால் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் மணவாழ்க்கை சுமாராக இருக்கும். சிவ தலத்தில் இருக்கக்கூடிய பைரவர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 20 Feb 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story