2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத நீண்ட தூர பயணம் உங்களுக்கு ஏற்படாவிட்டாலும், எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டாகும். நீண்ட நாட்களாக அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடிய சூழல் உள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட தொழில்களை செய்ய வாய்ப்புகள் உண்டு. காதலில் பிரேக்கப் ஏற்பட வாய்ப்புள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். வருமானம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் வாழ்க்கையும் முன்னேற்றத்தை கொடுக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். வேலையில் திருப்தியற்ற மனநிலை இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும், வேலையில் ஒரு முன்னேற்றம் பின்னாளில் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். நட்பு வட்டம் பெரிய அளவில் அமையும். எதிர்பாராத நண்பர்கள் கிடைப்பார்கள். நெருங்கிய நண்பர்களை பிரிவீர்கள். பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய தாயார் மற்றும் சிவத்தலத்தில் இருக்கக்கூடிய பைரவரை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
