✕
2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பணியில் மாற்றம் அல்லது வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானம் இருந்தாலும் செலவினங்கள் இருக்கும். இந்த வாரம் முழுவதும் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக வந்து சேரும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். தெய்வ அனுகூலத்தை அதிகப்படுத்துங்கள். முருகன் தரிசனம் மற்றும் விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

ராணி
Next Story