2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானம், புகழ், அந்தஸ்து கூடும். வருமானங்கள், சம்பாத்தியங்கள் அதிகரிக்கும். முதலீடுகள் செய்வது நல்லது. அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். கிரக நிலைகள் நன்றாக இருப்பதால் தொழில் தொடங்க நினைப்பவர்கள், தொழில்முனைவோராக வர நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யலாம். வேலையில் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத முன்னேற்றம் உண்டாகும். உங்கள் சர்வீஸ் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானம் இருந்துகொண்டே இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் செய்ய வேண்டாம். அதே நேரம் லாட்டரி, ரேஸ், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். லாபம் கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. பண வரவு, தன வரவு இருந்தால் முதலீடுகள் செய்யுங்கள். தெய்வ அனுகூலம் இருப்பதால் எடுக்கக்கூடிய காரியங்கள் வெற்றியடையும். பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய தாயார் மற்றும் சிவ தலத்தில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
