2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் விருப்பங்கள், ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீங்கள் நினைப்பவை அனைத்தும் நடக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களது நட்பு வட்டம் அதிகமாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் கிட்டும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. இந்த வாரம் உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு கூடிக்கொண்டே இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத டூர் அல்லது டிராவல், எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் போன்றவை இந்த வாரம் இருக்கும். குழந்தைகள் இருப்பவர்கள் அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான காலமாக உள்ளது. அவர்களுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய காலம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால் லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக மாறலாம். வேலையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. உங்கள் உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் இருக்கிறது. வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சிவ தலங்களில் இருக்கக்கூடிய பிரம்ம தேவர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள் சிறப்பான பலன்கள் ஏற்படும்.
