2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பிரகாசமான காலம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து, பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, அனைத்தும் உண்டு. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். லாபம் இருக்கிறது. இந்த வாரம் எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கிறது. அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, தயாரிப்புக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வேலை நன்றாக உள்ளது. கடின உழைப்பிற்கான பாராட்டு நிச்சயம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவையும் கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் பரவாயில்லை. நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சூரிய பகவான் மற்றும் சிவ தரிசனம் பிரதானமாக செய்வது நல்லது.
