2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். எதிலும் துணிந்து செயல்படுங்கள். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம், மகசூல் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வி பரவாயில்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்தால் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. ஏதாவது ஒரு வேலை வருமானத்தை கொடுக்கும். தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். சொந்த தொழில் ஓரளவுக்கு வருமானத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் திருப்திகரமாக இருக்க மாட்டார். கணவன் - மனைவி உறவும் அப்படித்தான். மூத்த சகோதர - சகோதரிகள், நண்பர்களால் நன்மை ஏற்படும். இந்த வாரம் அம்பாள் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள் ஏற்றம், முன்னேற்றம் அமையும்.
