2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் வேலை நிமித்தமான மாற்றங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவை இருந்தால் கடன் வாங்குங்கள். வழக்குகளில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. வேலையாட்கள் பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் சம்பாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்த செலவினங்களும் உ்ளளன. முயற்சிகள் ஒரளவுக்குதான் வெற்றி பெறும் என்பதால் தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் அனைத்தையும் தவிருங்கள். புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் ஏற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். ஏற்கனவே முதலீடு செய்து கொண்டிருப்பவர்களும் குறைத்து செய்யுங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். நமக்கு பிரயோஜனம் இல்லை. நம்முடைய பொருளும் முடங்கிக்கொள்ள வேண்டிய காலமாக இருப்பதால் எல்லாவற்றிலும் நிதானமாக இருங்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் நீங்களும் லாபம் அடைவீர்கள். உங்களது பார்ட்னரும் லாபம் அடைவார். மணவாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். வாரம் முழுவதுமே விநாயகர் வழிபாடு மற்றும் சிவ தரிசனம் செய்வது நன்மைகளை உண்டாகும்.
